யாழ்ப்பாணத்திலுள்ள பிரபலமான விடுதியொன்றில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்தமை தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
நேற்று முன்தினம் 69 வது சுதந்திர தினம் நாடளாவிய ரீதியாக கொண்டாடப்பட்டது.
இந்த நிலையில் மதுபானசாலைகளை மூடுவதற்கும், வேறு விதத்தில் மதுபானங்கள் விற்பனை செய்வதற்கும் அரசாங்கம் தடை விதித்திருந்தது.
இவ்வாறான நிலையில் யாழ்ப்பாணத்தில் விடுதி ஒன்றில் அரசாங்கத்தின் தடையையும் மீறி மதுபான விற்பனை இடம்பெறுவதாக பொலிஸாருக்கு தகவலொன்று கிடைத்திருந்தது.
இதனடிப்படையில் விசாரணை மேற்கொண்ட யாழ்ப்பாண பொலிஸ் நிலைய அலுவலர்கள் நேற்று முன்தினம் இரவு பத்து மணியளவில் விடுதியில் மதுபானம் விற்பனை செய்து கொண்டிருந்த பணியாளர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
குறித்த விடுதிக்கு எதிராக யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்வுள்ளதாகவும் யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்திருந்தனர்.