சட்டவிரோத மதுவிற்பனை தொடர்பில் 1500 முறைப்பாடுகள்

சட்டவிரோத மதுபாவனை மற்றும் விற்பனை தொடர்பில் கடந்த வருடம் யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டும் 1,575 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மது வரித் திணைக்களத்தின் வடமாகாண பொறுப்பதிகாரி சோதிநாதன்தெ ரிவித்தார்.

யாழ்ப்பாணம், சாவகச்சேரி, சங்கானை, மல்லாகம், பருத்தித்துறை, ஆகிய இடங்களில் உள்ள மதுவரித் திணைக்களத்தின் அலுவலகங்களில் கடந்த வருடத்தில் மட்டும் 1,575 முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

இதில் சட்டவிரோதமாக மது விற்பனை, சட்டவிரோத சிகரட், சுருட்டு விற்பனை, கஞ்சா விற்பனை, சட்டவிரோத கள்ளுவிற்பனை போன்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மது வரித்திணைக்களம் மேற்கொண்ட நடவடிக்கையின் முலம் அனேகர் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக நீதவான் நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டது. இதன்மூலம் நீதிமன்றத்தினால் 3,570,100 ருபாய் அபாராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதில் யாழ்ப்பாணத்தில் 313 முறைப்பாடுகள் பதியப்பட்டு 560,500 ருபாய் தண்டமும் சாவகச்சேரியில் 285 முறைப்பாடுகள் பதியப்பட்டு 869,000 ருபாய் அபராதம் சங்கானையில் 361 முறைப்பாடுகள் பதியப்பட்டு 169,600 ருபாய் அபராதமும் மல்லாகத்தில் 265 முறைப்பாடுகள் பதியப்பட்டு 387,500 ருபாய் அபராதமும் பருத்தித்துறையில் 351 முறைப்பாடுகள் பதியப்பட்டு 1,583,500 ருபாய் அபராதம் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Related Posts