வாள்களை கைவிட்டு இளைஞர்கள் தப்பியோட்டம்

உரும்பிராய் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு 7 மணியளவில் கடமையிலிருந்த, விசேட அதிரடிப்படையினரை கண்டு தப்பித்து ஓடிய நபர்களிடம் இருந்து வாள்கள் மிட்கப்பட்டுள்ளன. கோப்பாய்கப் பொஸிசார் நேற்று இந்த தகவலை வௌியிட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் – உரும்பிராய் பகுதியில் விசேட அதிரடிப்படையினர் கடமையிலிருந்த சமயம் மோட்டார் வண்டி ஒன்றில் இரு வாள்கள், கத்தி போன்ற ஆயுதங்களுடன் வந்து கொண்டிருந்த இளைஞர்கள் அந்த வீதியில் விசேட அதிரடிப்படையினரை கண்டதும் தமது மோட்டார் வண்டியை திருப்பி தப்பிச் செல்ல முயன்றனர்.

இந்த செயற்பாட்டால் சந்தேகமுற்ற விசேட அதிரடிப்படையினர் குறித்த இளைஞர்களை பின்தொடர்ந்து சென்றபோது இடையில் குறித்த இளைஞர்கள் பயணித்த வண்டி விபத்துக்குள்ளானதால் அவர்கள் தமது மோட்டார் வண்டியையும் வாள்களையும் கைவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.

இதன்போது அவர்கள் கைவிட்டு சென்ற மோட்டார் வண்டி, வாள்கள் என்பனவற்றை கைப்பற்றி கோப்பாய் பொலிஸாரிடம் விசேட அதிரடிப்படையினர் ஒப்படைத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து குறித்த மோட்டார் வண்டியில் பயணித்த இளைஞர்களை கோப்பாய் பொஸிசார் தேடிவருகின்றனர்.

Related Posts