இலங்கையின் 69ஆவது சுதந்திர தினம் நாளை (சனிக்கிழமை) அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், நாளைய தினத்தை துக்க தினமாக அனுஷ்டிக்கவுள்ளதாக தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கேப்பாப்பிலவு, பிலக்குடியிருப்பு கிராம மக்கள் எச்சரித்துள்ளனர்.
இதேவேளை, தமது காணிகளை ஆக்கிரமித்துள்ள ராணுவத்தினரை அங்கிருந்து வெளியேற்றி தங்களின் காணிகளை விடுவிக்க ஜனாதிபதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
யுத்த காலத்தில் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கிய மக்களின் காணிகளை ஆக்கிரமித்துள்ள படையினர், அங்கு ராணுவ மற்றும் விமானப்படை தளத்தினை அமைத்துக்கொண்டு மக்களை உள்நுழைய விடாமல் தடுத்து வருகின்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமது காணிகளை உடனடியாக விடுவிக்குமாறு கோரி அம்மக்கள் இன்று நான்காவது நாளாகவும் இரவு பகல் பாராது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் மாணிக்கம் கணேசன் வயது 50 என்பவரே இவ்வாறு மயக்கமடைந்துள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.
குறித்த நபர் முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.