இன்றைய தினம் பரந்தளவிலான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
இன்று காலை 08 மணிமுதல் 12 மணி வரை 4 மணித்தியாலங்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அந்த சங்கம் கூறியுள்ளது.
சைட்டம் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் மீது, தாக்குதல் நடத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.