ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று மட்டக்களப்பிற்கு விஜயம் செய்தார்.ஜனாதிபதி அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டடத் தொகுதியை திறந்துவைத்தார்.
இக்கட்டத்தொகுதி இரத்தவங்கி நவீன சத்திரசிகிச்சை கூடம் சட்ட வைத்தியபிரிவு கதிர்வீச்சு பிரிவு நோயாளர்கள் தங்கியிருந்து சிகிச்சைபெறுவதற்கான வசதி மற்றும் நிர்வாகப்பிரிவு ஆகியன உள்ளடங்களாக அமைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான நிகழ்வு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் கெ. கருணாகரன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் எதிர்க்கட்சிதலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா சம்பந்தன் அமைச்சர் ராஜித சேனாரத்ன இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் மற்றும் மாணவர்கள் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.