நாட்டின் வடக்கு பிரதேசங்களில் காலை மற்றும் இரவு வேளைகளில் எதிர்வரும் நாட்களில் குளிர் காலநிலை ஏற்படக்கூடும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் பல பிரதேசங்களில் மழையுடன் கூடிய காலநிலை நிலவும் என அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
தென் மாகாணத்தில் பல இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் காலை நேரங்களில் பனிமூட்டம் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.