கனடா ஒன்றாரியோ மாநிலத்திற்கு வடமாகாண அமைச்சரவையின் அங்கீகாரம் பெற்றதன் பின்னரே விஜயம் செய்ததாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்
வடமாகணசபையின் 83 ஆவது அமர்வு இன்றைய தினம் மாகாண சபையின் பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது எதிர்கட்சி தலைவர் சி.தவராசா முதலமைச்சரை நோக்கி கனடா நாட்டின் ஒன்றாரியோ மாநிலத்தின் பிறம்ப்ரன், மார்க்கம் நகரங்களுக்கும் முல்லைத்தீவு, வவுனியா நகரங்களுக்கிடையிலும் உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டிருந்தது.
இந்த உடன்படிக்கை குறித்து வடமாகாண அமைச்சரவைக்கு தெளிவு படுத்தப்பட்டதா? உடன்படிக்கையின் உள்ளடக்கம் அமைச்சரவைக்கு வழங்கப்பட்டதா? புரிந்துணர்வு ஒப்பந்ததிற்கு முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்ட செயலாளர்களின் அனுமதி பெறப்பட்டதா என முதலமைச்சரை நோக்கி கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், கடந்த டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி மாகாண அமைச்சரவைக்கு கூறப்பட்டுள்ளது.
ஒப்பந்தத்தின் வரைபு அமைச்சரவைக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தின் வரைபு பொருத்தமான சந்தர்ப்பத்தில் சபைக்கு சமர்பிக்கப்படும்.
மேலும் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர், வவுனியா நகரசபை தலைவர் ஆகியோரின் ஒப்புதல் பெறவேண்டிய அவசியம் இல்லை. என பதிலளித்துள்ளார்.