வாள்வெட்டு: மூவருக்கு மறியல்

ஆவரங்கால், நவோதய வீதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில், கைதான சந்தேக நபர்கள் மூவரை, எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் மாவட்ட நீதவான் ஏ.யூட்சன், ஞாயிற்றுக்கிழமை (29) உத்தரவிட்டார்.

இந்தச் சம்பவத்துடன், தொடர்புடைய குற்றச்சாட்டில் ஏற்கெனவே மூவர் கைதாகி, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் மூவர், அச்சுவேலி குற்றத்தடுப்பு பொலிஸாரால் சனிக்கிழமை (28) கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதேவேளை, இந்தச் சம்பவத்துடன் மேலும் 6 பேருக்கு தொடர்புள்ளதாக இனங்காணப்பட்டுள்ளதால், அவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

கடந்த 15ஆம் திகதி அச்சுவேலி தெற்கு பகுதியினை சேர்ந்த இளைஞர்களுக்கும், ஆவரங்கால் நாவோதயா பகுதியினை சேர்ந்த இளைஞர்களுக்கு இடையில் இடம்பெற்ற கைகலப்பில் ஐவர் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts