ஐந்நூறு வன்னி மாணவா்களுக்கு உதவி

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட ஐந்நூறு மாணவா்களுக்கு மூன்று வருடங்களுக்கு ஆயிரம் ரூபா வீதம் உதவி வழங்கும் ஆரம்ப நிகழ்வு இன்று இடம்பெற்றது.

பிரதமர் அலுவலகம். சிறுவா் பெண்கள் விவகார அமைச்சு, சிறுவா் நன்னடத்தை திணைக்களம்,கிளிநொச்சி மாவட்டச் செயலகம் ஆகியவற்றின் அனுசரணையில் கொழும்பு மயூரபதி அம்மன் நலன்புரிச் சங்கத்தினால் மேற்படி உதவித்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவா்களுக்கு மூனறு வருடங்களுக்கு தலா ஆயிரம் ரூபா வீதம் வழங்கப்படவுள்ளது. இதற்காக வங்கி கணக்கு ஆரம்பிக்கப்பட்டு மாணவா்களிம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் வடக்கு மாகாண முதலமைச்சா் சிவி.விக்னேஸ்வரன், சிறுவா் பெண்கள் விவகார இராஜாங்க அமைச்சா் விஜயகலா மகேஸ்வரன், வடக்கு மாகாண சபை உறுப்பினா் அரியரத்தினம், பெண்கள் சிறுவா் விவகார அமைச்சின் செயலாளா் சந்திரரணி சேனாரட்ன கிளிநொசசி மாவட்ட அரச அதிபா் சுந்தரம் அருமைநாயகம், மேலதிக அரச அதிபா் சத்தியசீலன், கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளா் க.முருகவேல் மற்றும் மயூரபதி அம்மன் ஆலய நிர்வாகத்தினா் என பலா் கலந்துகொண்டனா்

Related Posts