ஏப்ரல் 01 ஆம் திகதி முதல் முச்சக்கர வண்டி புதிய சட்டங்கள் அமுல்

இதுவரையில் முச்சக்கர வண்டி தொடர்பில் அறிமுகம் செய்துவந்த புதிய சட்டங்கள் அனைத்தும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே, இது தொடர்பில் வெளியிடப்பட்டிருந்த வர்த்தமானி அறிவித்தல் மேற்படி திகதி முதல் அமுலுக்கு வரும் எனவும் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

அறிமுகமாகியுள்ள புதிய சட்டதிட்டங்களின் படி, அனைத்து முச்சக்கர வண்டிகளிலும் சாரதி ஆசனத்திற்கு பின்புறமாக வாகனத்தின் பதிவிலக்கம், சாரதியின் பெயர், சாரதியின் புகைப்படம் என்பன காட்சிப்படுத்தப்பட வேண்டும். பயணிகள் போக்குவரத்துக்குப் பயன்டுத்தப்படும் அனைத்து முச்சக்கர வண்டிகளிலும் மீட்டர் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.

Related Posts