இன்றும் நாளையும் நாட்டின் பல பிரதேசங்களில் கடும் மழை பெய்யக்கூடும்!

நாட்டின் பல இடங்களில் இன்றும் நாளையும் இடியுடன் கூடிய கடுமையான மழை பெய்யக்கூடுமென எதிர்பார்ப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அடுத்து வரும் 48 மணித்தியாலத்துக்குள் வடக்கு, கிழக்கு உட்பட வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் கடுமையான மழை எதிர்பார்க்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மட்டக்களப்பில் கடும் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், மக்களின் அன்றாட வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts