மாங்குளம் – துணுக்காய் வீதியில் உள்ள வன்னிவிளாங்கும் பகுதியில் வியாழக்கிழமை (26) இரவு இடம்பெற்ற விபத்தில் துவிச்சக்கர வண்டியில் சென்ற முதியவர் படுகாயங்களுக்கு உள்ளாகி, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
ஓய்வு பெற்ற பதில் தபாலதிபரான மாப்பாணப்பிள்ளை கதிர்காமநாதன் (வயது – 57) என்பரே படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
முதியவரை மோதிய வாகனம் நிறுத்தாமல் சென்றதையடுத்து, வாகன சாரதியை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இறுதிப் போரின் போது தனது குடும்பத்தினரை இழந்து தனிமையில் வாழ்ந்து வந்த முதியவரே இவ்வாறு படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.