ஆவரங்கால் பகுதியில் கடந்த வாரம் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மூவர், அச்சுவேலி குற்றத்தடுப்பு பொலிஸாரால் திங்கட்கிழமை மாலை, கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் தலைமறைவாகி இருந்த நிலையில், கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தைப்பொங்கல் தினத்தன்று, அச்சுவேலி தெற்கு பகுதி இளைஞர்களுக்கும், ஆவரங்கால் நவோதயா பகுதி இளைஞர்களுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையினை தீர்த்து வைப்பதற்கு பெரியோர்கள் எடுத்த முயற்சியின் போதே இவ் வாள்வெட்டு 15ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது.
இச்சம்சம்பவத்தில் அதேயிடத்தை சேர்ந்த ஐவர் காயங்களுக்கு உள்ளான நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இதேவேளை, இச்சம்பவத்துடன் தொடர்புள்ள சந்தேகநபர்கள் இருவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.