முல்லைத்தீவு விஸ்வமடு மகா வித்தியாலயத்திற்கும் விசுவநாதர் ஆரம்ப வித்தியாலயத்திற்கும் இடையில் உள்ள மரத்தில் இருந்த குளவிக்கூடு நேற்று (23) கலைந்ததன் காரணமாக விசுவநாதர் ஆரம்ப வித்தியாலய மாணவர்கள் 30 பேரும் ஆசிரியர்கள் 5 பேரும் பாதிக்கப்பட்டனர்.
விஸ்வமடு மகா வித்தியாலய மாணவர்கள் 9 பேரும் ஆசிரியர்கள் 2 பேரும் குலவிக்கொட்டுக்கு இலக்காகி அவசர நோயாளர் காவுவண்டிகள் மூலம் தர்மபுரம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.
இதில் இரண்டு ஆரம்பப்பிரிவு மாணவர்கள் அவசர நோயாளர் காவுவண்டி மூலம் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்
இதனால் இரண்டு குறித்த பாடசாலைகளும் அவசரநிலையை கருத்திற் கொண்டு நேற்றைய தினம் தற்காலிகமாக கல்வி செயற்பாடுகள் நிறுத்தப்பட்டன.