சாகும்வரையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட பிக்குணி வைத்தியசாலையில் அனுமதி!

தலதா மாளிகைக்கு முன்னால் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த பிக்குணியின் உடல் நிலை மோசமடைந்துள்ளதையடுத்து கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புதிய அரசியலமைப்புத் திருத்தம் மூலம் நல்லாட்சி அரசாங்கம் நாட்டைப் பிரிக்கமுயல்வதாகக் கூறி குறித்த பிக்குணி சாகும் வiரையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தார்.

எனினும், இவர் தன்னை யார் என்று வெளிப்படுத்தவில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னரும் இவர் தனது பெயர் உள்ளிட்ட விபரங்களை மருத்துவர்களுக்கு வெளியிட மறுத்துள்ளார்.

ஆனால், குறித்த பிக்குணி உதய கம்மன்பில தலைமையிலான பிவிதுரு ஹெல உறுமயவுடன் நெருங்கிய தொடர்படையவர் என சிறீலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த பிக்குணி தொடர்பாக காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையின்போது இவர் கிரியுல்ல என்ற இடத்திலிருந்து வந்தவர் என அறியமுடிகின்றது.

Related Posts