தொடர்கிறது முன்னாள் போராளிகளின் கைது!

கிளிநொச்சி மாவட்டம் திருவையாறுப் பிரதேசத்தில் மீண்டுமொரு முன்னாள் போராளி கைதாகியுள்ளார்.

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட கராளசிங்கம் குலேந்திரன் என்பரே கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காப்புறுதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவந்த குறித்த முன்னாள் போராளி கடந்த வாரம் வெளியில் சென்றிருந்தபோது பயங்கரவாத குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு தற்போது வவுனியா சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

புனர்வாழ்வு பெற்று விடுதலையான முன்னாள் போராளிகள் ஒருபுறம் மர்மமான முறையில் மரணமடைந்து வருவதுடன், இன்னொரு புறம் தொடர்ச்சியாக கைதுசெய்யப்பட்டு வருகின்றமை மக்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்கியுள்ளது.

Related Posts