வல்வெட்டிதுறை பிரதேசத்தில் போலி நாணயத்தாள்கள் அச்சிட்ட 5 சந்தேக நபர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 18 தொடக்கம் 27 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, சந்தேக நபர்கள் இன்று பருத்தித்துறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் போலி நாணயத்தாள்களை பயன்படுத்தி மதுபானம் வாங்கும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர். இதன்போதே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.