வட மாகாண சபை சாதனை

வட மாகாண சபையில் 81 கூட்டத் தொடர்களில் 321 பிரேரணைகளை நிறைவேற்றி சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2013 ஆம் ஆண்டு சி.வி. விக்னேஷ்வரன் தலைமையில் அமைக்கப்பட்ட வட மாகாண சபையில் இடம்பெற்ற கூட்டத்தொடர்களிலேயே இவ்வாறு பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இதில் அதிகமான தீர்மானங்கள் இலங்கை அரசாங்கத்துக்கும், இராணுவத்துக்கும் எதிரானவை எனவும் கூறப்படுகின்றது.

இந்த பிரேரணைகளில் அதிகமானவை ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts