மாகாண சபைகள் என சொல்லப்படாமல் மாகாண அரசாங்கம் என சொல்லப்பட அழைப்பதுதான் உகந்தது. அதைவிட பிராந்திய அரசாங்கம் என்று சொல்லப்படவேண்டிய காலம் விரைவிலே வரவேண்டும். என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்றய தினம் நெடுந்தாரகை படகுச் சேவையினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார் .
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்.
இந்த நெடுந்தாரகை படகினை தந்து உதவிய அனைவருக்கும் வடபகுதி மக்கள் சார்பில் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். நெடுந்தீவிற்கு போய் வருவதென்றால் உயிரை கையில் பிடித்துக்கொண்டுதான் செல்லவேண்டும். அவசரமாக செல்லவேண்டும் என்றால் நேவியினுடைய அதிவேக படகிலேயே செல்லவேண்டும். அது இன்னும் பயங்கரமானதாக இருக்கும். ஆனால் தற்போது அந்த நிலைமை மாறி பாதுகாப்பான பயணத்தினை மேற்கொள்ள முடியுமானதாக உள்ளது.
மாகாண சபைகள் என சொல்லப்படாமல் மாகாண அரசாங்கம் என சொல்பட அழைப்பதுதான் உகந்தது அதைவிட பிராந்திய அரசாங்கம் என்று சொல்லப்படவேண்டிய காலம் விரைவிலே வரவேண்டும். அப்படியாக பிராந்திய அரசாங்கங்களுக்கு ஆட்சி அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு உள்ளூராட்சி மன்றங்களுக்கும் இன்னுமொரு வித்தியாசமான நிரல் ஒண்டு உருவாக்கப்பட்டு அவர்களும் தங்களின் அதிகாரங்களை கவனிக்கத்தக்க மாதிரியான புதிய அரசியல் யாப்பு வர இருப்பது எல்லோருக்கும் தெரியும்.
போதிய அரசியல் யாப்பை உருவாக்குவதில் பல தடங்கல்கள் உருவாகிறது. அதனை முறியடிப்பதற்கு சிறீலங்கா சுகந்திர கட்சி பல வழிகளை கையாண்டு வருகிறது. இங்கு சிறீலங்கா சுகந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வருகை தந்து இருக்கிறார். வடக்கு கிழக்கு மக்களினுடைய உள்ள கிடக்கைகளை அறிந்து தனது கட்சி உயர் பீடத்திடம் தெரிவிப்பார் என நம்புகிறேன்.
எங்களுக்கு இருக்க வேண்டிய அதிகாரங்கள் பகிரப்பட்டு இந்த நாட்டிலே இருக்கின்ற 70வருட கால இனப்பிரச்சனையை தீர்ப்பதற்கு எமக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும். அதற்காக இரண்டு பிரதான கட்சிகளும் உழைக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.