வறட்சிக் காலநிலை நீங்கி மழைவேண்டி மலையகத்தில் உள்ள ஆலயங்களில் தண்ணீர் ஊற்றி பூஜைவழிபாடுகளில் பொதுமக்கள் ஈடுப்பட்டு வருகின்றனர்.
லிந்துலை டில்குற்றி தோட்ட முத்துமாரியம்மன் ஆலயத்தில் நேற்று ஆலயத்தில் சுற்று வட்டாரங்களுக்கும் சுவாமி விக்ரங்களுக்கும் நீராபிஷேகம் செய்யப்பட்டது. இதில் இத்தோட்ட மக்கள் தண்ணீர் ஊற்றி அபிஷேகம் செய்தனர்.
இதேவேளை நாட்டில் காலநிலையில் இன்று முதல் மாற்றம் நிலவவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.வரட்சியான காலநிலையில் இதன் மூலம் மாற்றம் நிலவக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்கு வடமத்தியமாகாணம் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இடியுடன்கூடிய மழை பெய்யக்கூடும் என்று திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டின் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியம் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பிற்பகல் 2 மணிக்கு பின்னர் ஏற்படக்கூடும் என்று திணைக்களம் அதன் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் சில பிரதேசங்களிலும் பனிமூட்டமான காலநிலை காணப்படும் என்று திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டில் மணிக்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் பலமான காற்று வீசக்கூடும் என்றும் திணைக்களம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.