சிறிய, மத்தியதர தொழில் முயற்சியாளர்களுக்காக புதிய கடன் திட்டம் ஒன்றை இந்த மாதத்திலிருந்து நடைமுறைப்படுத்த தேசிய கொள்கை, பொருளாதார அலுவல்கள் அமைச்சு இலங்கை மத்திய வங்கியுடன் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளது.
இளைஞர்கள், இளம் பட்டதாரிகள், பெண்கள், விசேட தேவையுடைய நபர்களின் நிதி மற்றும் தொழில்நுட்ப தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு இந்த கடன் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவிக்கின்றது.
இது ஆகக்கூடிய தொகை 50 ஆயிரம் ரூபாய் ஆகும். தொழில்துறை ஆரம்பத்தின் போது அடிப்படை செலவுக்கான விசேட கொடுப்பனவு ஒன்றை பெற்றுக்கொடுப்பது இந்த கடன் திட்டத்தின் நோக்கம்hகும் என்று இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.