கௌதம புத்தர் அவதரித்த இந்தியாவின் மாதிரி கிராமம் ஒன்று இலங்கையில் நிர்மாணிக்கப்படவுள்ளது.
2017ம் ஆண்டு சர்வதேச வெசாக் தினத்தை கொண்டாடுவதுடன் தொடர்புபட்டதாகவும் உலக பௌத்த சம்மேளனத்தை ஒட்டியதாகவும் இந்த கிராமம் கெஸ்பாவவில் அமைக்கப்பட்வுள்ளது.
இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று நடைபெறவுள்ளது.
கெஸ்பாவவில் 50 கோடி ரூபா செலவில் இந்த கிராமம் நிர்மாணிக்கப்படவுள்ளது.
நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, பிரதியமைச்சர் துஷ்மந்த மித்திரபால ஆகியோரின் தலைமையில் நாளை காலை சுபவேளையில் நடைபெறும். லைட் ஒப் ஏசியா நிறுவனம் இதற்கான பங்களிப்பை நல்குவதுடன் அதன் தலைவர் நவின் குணரட்னவும் அடிக்கல் நாட்டும் வைபத்தில் கலந்து கொள்வார்.
நேபாளத்தின் தூதுவர் திருமதி தனாகுமாரி ஜோசி மற்றும் நேபாளத்தின் கபிலவஸ்து நகரின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் வசந்த பிதாய் ஆகியோரும் இதில் கலந்து கொள்வர்.