வடமாகாண பாடசாலைகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை

வடமாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் தைப்பொங்கல் தினத்துக்கு முன்தினமான எதிர்வரும் வெள்ளிக்கிழமை (13) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான பதில் பாடசாலை எதிர்வரும் 21 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறும் என வடக்கு மாகாணக் கல்வி அமைச்சரனி செயலாளர் இ.இராவீந்திரன் தெரிவித்தார்.

நாளை மறுதினம் 12 ஆம் திகதி விடுமுறை நாளாக உள்ளது. எதிர்வரும் 14 ஆம் திகதி தைப்பொங்கல் தினம். இதனால் வெள்ளிக்கிழமை பாடசாலையை நிறுத்தி அதற்குப் பதிலாக 21 ஆம் திகதி அனைத்துப் பாடசாலைகளும் இயங்கும் என அவர் தெரிவித்தார்.

Related Posts