ஜல்லிக்கட்டிற்கு தமிழகம் முழுக்க ஆதரவு பெருகி வரும் வேளையில் நடிகர் கமல்ஹாசனும் ஜல்லிகட்டிற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஜல்லிகட்டும் ஒன்றும். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு தடைபட்டு கிடக்கிறது.
இந்தாண்டாவது ஜல்லிக்கட்டு நடைபெறுமா என்று தமிழர்கள் ஆவலோடு எதிர்பார்த்து வருகின்றனர். மேலும் ஜல்லிக்கட்டை நடத்த கோரி மாநிலம் முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனும் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடந்த பத்திரிகை ஒன்றின் மாநாட்டில் பங்கேற்று பேசிய கமல்,
ஜல்லிக்கட்டு குறித்து தனது ஆதரவை தெரிவித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது…
‛‛ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரியம். முதலில் ஜல்லிக்கட்டு போட்டி என்று சொன்னதற்கு நன்றி, ஏறுதழுவுதல் என்பது தான் உண்மையான பெயர். அதிலிருந்து வந்தது தான் ஜல்லிக்கட்டு. ஜல்லிக்கட்டு மிருகவதை கிடையாது. ஜல்லிக்கட்டை தடை செய்தால் பிரியாணியையும் தடை செய்யுங்கள். ஸ்பெயின் நாட்டில் மிருகங்களை துன்புறுத்துகிறார்கள், அதனால் அது இறக்கவும் செய்கிறது. ஆனால் இங்கு காளைகளை கடவுளாக பார்க்கிறார்கள். ஸ்பெயின் நாட்டில் நடக்கும் காளை சண்டையை ஜல்லிக்கட்டோடு ஒப்பிடாதீர்கள்”.
இவ்வாறு கமல் கூறியுள்ளார்.