வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான விஷேட பொலிஸ் குழுவினால் வாள் வெட்டு குழுச் சேரந்த சந்தேகநபர்கள் ஐவர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தினை சிவில் பாதுகாப்பு குழுவை சேர்ந்தவர்கள் புகைப்படம் எடுத்து, வடமாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரி.கணேசநாதனுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான விஷேட பொலிஸ் குழுவினர், விசாரணைகளை முன்னெடுத்து வாள் வெட்டுக் குழு சந்தேகநபர்கள் ஐந்து பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஐந்து பேரையும் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.யூட்சன், முன்னிலையில் வெள்ளிக்கிழமை முற்படுத்திய போது, ஐந்து பேரையும் விளக்கமறியலில் நீதவான் வைக்குமாறு உத்தரவு இட்டுள்ளார்.