அம்பாந்தோட்டையில் சீனா 5 பில்லியன் டொலர் முதலீடு

அம்பாந்தோட்டை முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் ஐந்து பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யவுள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் யிசியென் லியேன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற அம்பாந்தோட்டை முதலீட்டு ஊக்குவிப்பு வலய திறப்பு விழாவில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டு வரையான காலப்பகுதியில் இந்த முதலீடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் இந்த முதலீட்டினை மேற்கொள்வதன் ஊடாக ஒரு இலட்சம் தொழில் வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை இதனை இன்று ஆரம்பமான இலங்கை – சீன கூட்டு அபிவிருத்தி செயற்பாட்டின் போது, அங்கு கூடிய சுமார் நூற்றுக்கணக்கான தேரர்கள் மற்றும் கூட்டு எதிரணியினர் ஆகியோர் ஒன்றுகூடி குறித்த செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

தொடர்ந்து அங்கு ஏற்பட்ட மோதலை அடுத்து விசேட அதிரடி படையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டு, எதிர்ப்பாளர்களை நோக்கி கண்ணீர் புகை மற்றும் தண்ணீர் பிரயோகத் தாக்குதல் என்பன முன்னெடுக்கப்பட்டன இதன் போது இரு பொலிஸார் உட்பட ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த அறுவரும் அம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Posts