விபத்தில் உயிரிழந்த மாணவி உயர்தரப் பரீட்சையில் வவுனியா மாவட்டத்தில் முதலிடம்!

2016ஆம் ஆண்டு நடைபெற்ற உயர்தரப் பரீட்சையில் கணிதப் பிரிவில் மூன்று பாடங்களிலும் ஏ தரச் சித்தியெத்தி மாவட்ட மட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்ட மாணவி சிவதுர்க்கா அண்மையில் மாகோ பிரதேசத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் பலியாகியவராவார்.

வவுனியா இறம்பைக் குளம் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த சிவதுர்க்கா சிறந்த பெறுபேற்றை பெறுவார் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று வெளியான உயர்தரப் பரீட்சைப் பெறுபேறில் இவர் கணித பாடத்தில் 3 ஏ சித்திகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார்.

வவுனியா பிரபல பெண் வைத்திய அதிகாரியான கௌரி மனோகரி நந்தகுமார் மற்றும் அவரது பெறாமகளான சிவதுர்க்கா சத்தியநாதன் ஆகியோர் கடந்த ஒக்டோபர் மாதம் கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது மாகோ பிரதேசத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கனரக வாகனமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியதில் இருவரும் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts