அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கியதாக பேச்சுவார்த்தைகள் அமைய வேண்டும்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகளின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கி அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டும் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவரின் காரியாலயத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ‘அரசுடனான பேச்சுவார்த்தைகளின்போது கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மற்றும் பேச்சாளர் சுமந்திரன் ஆகியோர் மட்டுமே பங்கேற்பதனால் எமக்கு அங்கு பேசப்படும் விடயங்கள் குறித்து தெரிவதில்லை. நாம் மக்களிடம் செல்லும்போது அவர்கள் எம்மிடம் கேட்கும் கேள்விகளுக்கு நாம் பதிலளிக்க வேண்டும்.

எனவே, தற்போதுள்ள உப குழுக்களின் ஊடாக மட்டுமன்றி கட்சி ரீதியிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகளின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கி அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டும்’ என்றார்.

Related Posts