சம்பந்தன் தலைமையில் கொழும்பில் இன்று கூடுகிறது கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை கொழும்பில் நடத்துவது தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிந்த நிலையில், கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் இக் கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4.30 இற்கு நடைபெறவுள்ளது.

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் உள்ளக விசாரணை பொறிமுறை போன்றன குறித்து அண்மைய நாட்களாக பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், இச் சந்திப்பின்போது இவை குறித்து ஆராயப்படுமென கூட்டமைப்பின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, தமிழ் மக்களின் கோரிக்கைகளை புதிய அரசியல் அமைப்பில் உள்வாங்குவது தொடர்பில் அரசாங்கம் முரண்படுமாயின் அரசமைப்பு தொடர்பான வழிநடத்தல் குழுவில் இருந்து சம்பந்தனும் சுமந்திரனும் வெளியேற வேண்டுமென கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்களுள் ஒருவரான சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டிருந்த நிலையில், அதுகுறித்தும் ஆராயப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts