இன்று முதல் எட்டு மணித்தியாலங்கள் கட்டுநாயக்க விமான நிலையம் மூடல்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் மேற்கொள்ளவுள்ள திருத்தப் பணிகள் இன்றுமுதல் ஆரம்பிக்கப்பட உள்ளது.

குறித்த திருத்தப் பணிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 06 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள நிலையில் காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணிவரை விமான நிலையத்தின் ஓடுபாதையின் திருத்தப் பணிகள் மேற் கொள்ளப்படவுள்ளது.

இதன் காரணமாக 8 மணித்தியாலங்கள் விமான நிலையம் மூடப்படவுள்ளமையால் பயணிகளை 5 மணித்தியாலங்களுக்கு முன் விமான நிலையத்திற்கு வருகை தருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Related Posts