பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கம் 2 மணித்தியாலங்கள் செயற்படாது

119 என்ற பொலிஸ் அவசர அழைப்பு மையத்தின் தொலைபேசி கட்டமைப்பு எதிர்வரும் 9ம் திகதி இரண்டு மணித்தியாலங்களுக்கு செயற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள புனரமைப்பு நடவடிக்கைகளே இதற்குக் காரணம் என, பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய 9ம் திகதி அதிகாலை 04.00 மணிமுதல் 06.00 மணி வரை இரண்டு மணித்தியாலங்கள் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த இரண்டு மணி நேரங்களும் பொலிஸ் அவசர தொலைபேசி கட்டமைப்பு முழுமையாக செயழிழக்கும் எனவும், இதனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களுக்கு வருந்துவதாகவும் பொலிஸ் தலைமையகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

119 என்ற பொலிஸ் அவசர அழைப்பு மையத்தின் தொலைபேசி கட்டமைப்பில் அடிக்கடி ஏற்படும் கோளாறுகளைத் தடுக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts