பிராந்திய விமான நிலையமாக மாறுகிறது பலாலி

வடக்கிற்கு விசேட அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதன் ஒரு அங்கமாக பலாலி, பிராந்திய விமான நிலையமாக தரமுயர்த்தப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

‘பலமிக்கதோர் இலங்கை’ எனும் எதிர்கால பொருளாதார திட்டத்தை நேற்று (புதன்கிழமை) அலரி மாளிகையில் வெளியிட்டுவைத்து உரையாற்றிய பிரதமர், குறித்த பொருளாதார திட்டத்தில் பலாலி விடயமும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தார்.

பொருளாதார அபிவிருத்தியில் வடக்கு மாகாணம் குறித்கு விசேட கவனஞ்செலுத்தப்படுமென குறிப்பிட்ட பிரதமர், கைத்தொழில் பேட்டைகளை உருவாக்குவதோடு இலகு படகு சேவையை ஆரம்பிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, மலையகத்திலும் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் மேலும் தெரிவித்தார்.

Related Posts