அம்பாந்தோட்டைக்கு 1 மில்லியன் சீனர்கள் வரவுள்ளனர்!

அம்பாந்தோட்டையில் சீனாவின் திட்டங்களில் பணியாற்றுவதற்காக 1 மில்லியன் சீனர்கள் நுழைவு விசா பெறுவதற்கு விண்ணப்பித்துள்ளதாக ஜாதிக ஹெல உறுமய அமைப்புத் தெரிவித்த கருத்தை சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரட்ண நிராகரித்துள்ளார்.

சிறீலங்கா அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஜாதிக ஹெல உறுமய கொழும்பில் நடாத்தியிருந்த செய்தியாளர் சந்திப்பில் அக்கட்சியின் பேச்சாளர் நிசாந்த சிறிவர்ணசிங்க மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து நேற்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் ராஜித சேனாரட்ண,

சிறீலங்கா அரசாங்கத்திடம் இதுவரை அப்படியான கோரிக்கைகள் எதுவும் விடுக்கப்படவில்லை.

அம்பாந்தோட்டையில் ஆரம்பிக்கப்படவுள்ள சீனாவின் திட்டத்தில் பணியாற்றும் சீனர்கள் தொடர்பான எந்தவித நிபந்தனையும் விதிக்கப்படவில்லை.

எத்தகைய எதிர்ப்புகள் வந்தாலும், அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்திடம் கையளிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும். இது ஒரு தேசிய செயற்பாடு ஆகும் என்றும் அவர் தெரிவித்தார்.

Related Posts