தென்ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் பேட்டியின் இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டுள்ளது.
07 விக்கட்டுக்களை இழந்து 224 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது அந்த அணி ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டுள்ளது.
அதன்படி இலங்கை அணி இந்தப் போட்டியில் வெற்றிபெற வேண்டுமாயின் 507 ஓட்டங்களைப் பெற வேண்டியுள்ளது.
தனது இரண்டாவது இனிங்சில் துடுப்பெடுத்தாடும் இலங்கையணி நேற்றய நாள் ஆட்ட முடிவில் 130 ஒட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்துள்ளது. இலங்கையணி வெற்றி பெற இன்னும் 377 ஒட்டங்கள் தேவையாகவுள்ள நிலையில் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற இன்னும் 6 விக்கெட்டுக்களே எடுக்கவேண்டியுள்ளது என்பதோடு இன்று ஆட்டத்தின் நான்காம் நாள் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
முன்னதாக முதலாவது இனிங்சில் தென்னாபிரிக்க அணி 392 ஓட்டங்களையும், இலங்கை அணி 110 ஓட்டங்களைப் பெற்றது.