மனித நுகர்வுக்கு தகுதியற்ற அரிசிகள் விற்பனை!

மனித நுகர்வுக்கு தகுதியற்ற அரிசியை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் தொடர்பில் விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை நுகர்வோர் விவகார அதிகார சபை ஆரம்பித்துள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஷசித திலகரத்னவின் பணிப்புரையின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சில வர்த்தக நிலையங்களில் மனித நுகர்வுக்கு தகுதியற்ற அரிசிகள் விற்பனை செய்யப்படுவதாக, அண்மையில் ஊடகங்களில் செய்தி வௌியானது.

இதற்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் படி, கொழும்பு – புறக்கோட்டை பகுதியில் விஷேட சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டன.

இதனையடுத்து ஒருதொகை அரிசி இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதோடு, இவற்றின் மாதிரிகளை பரிசோதனைக்காக அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts