கைத்துப்பாக்கியை ஒப்படைத்ததற்காக வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவருக்கு பணப்பரிசு!

கடந்த வருடம் மார்ச் மாதம் தனிப்பட்ட பாவனைக்காக கைத்துப்பாக்கிகளை வைத்திருந்து, அரசாங்கத்திடம் ஒப்படைத்தவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், வடக்கு மாகாணத்தின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசாவும் கௌரவிக்கப்பட்டார். இவருக்கு சிறீலங்கா அரசாங்கத்தினால் 10,000 ரூபா பணப்பரிசிலும், சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தவராசாவுக்கு, அவரது தனிப் பாதுகாப்புக்காக அனுமதிப்பத்திரத்துடன் கூடிய கைத்துப்பாக்கி வழங்கப்பட்டிருந்தது. குறித்த கைத்துப்பாக்கிக்குரிய அனுமதிப் பத்திரம் காலாவதியான நிலையில் அதனைப் புதுப்பிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், புதிய அனுமதிப்பத்திரத்தினைப் பெறுவதற்காக 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொழும்பு மாவட்டச் செயலகத்தில் குறித்த கைத்துப்பாக்கி ஒப்படைக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு தனிப்பட்ட பாதுகாப்புக்கு வழங்கிய கைத்துப்பாக்கிகளை மீண்டும் வழங்கியவர்கள் நேற்று முன்தினம் கொழும்பு மாவட்டச் செயலகத்தில் கௌரவிக்கப்பட்டனர். அந்த வகையில் வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவரும் கௌரவிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts