பதில் முதல்வராக பொ.ஐங்கரநேசன் சத்தியப்பிரமாணம்

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தனிப்பட்ட விஐயமாக லண்டன் மற்றும் கனடா நாடுகளுக்கு செல்வதன் அடிப்படையில் அவரின் பதவியினை வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனிடம் கையளிக்கப்பட்டது.

இதனையடுத்து, வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே முன்னிலையில் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

குறித்த சத்தியப்பிரமாணம் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இவரின் முதலமைச்சர் பதவியானது எதிர்வரும் 03 வாரத்திற்கு நீடிக்கப்படும் என்று வடமாகாண ஆளுநர் ரெஐினோல்ட் குரே தெரிவித்தார்.

இதில் விவசாய அமைச்சின் செயலாளர் பற்றிக் நிரஞ்சன், முதலமைச்சரின் செயலாளர் வீ.கேதீஸ்வரன் மற்றும் வடமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.சிவஞானம், வடமாகாண ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Posts