மஹிந்த விரும்பியதை செய்யலாம்!! ஆனால் நானே பிரதமர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தான் விரும்பியதை செய்ய சுதந்திரம் உண்டு எனவும், எதுஎவ்வாறு இருப்பினும் தானே நாட்டின் பிரதமர் எனவும், ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிறந்திருக்கும் புதுவருடத்தில் முதன்நாள் கடமைகளை ஆரம்பிக்கும் முகமாக, அரலி மாளிகையில் இன்று இடம்பெற்ற நிகழ்வின் போது, ஊடவியலாளர்களை சந்தித்த வேளையே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

இதன்போது, 2017ம் ஆண்டு அரசாங்கம் கவிழ்க்கப்படும் என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை குறித்து ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த ரணில் விக்ரமசிங்க, தான் அடுத்த வாரம் சுவிஸர்லாந்து செல்லவுள்ளதாகவும், அச் சந்தர்ப்பத்தில், மஹிந்த ராஜபக்ஷ தான் கூறியதைபோல செயற்பட முயற்சிக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Posts