அமைதியை நிலை நாட்டுவதையே புத்தாண்டு உறுதிமொழியாகக்கொள்ள வேண்டும்

உலக மக்கள் அனைவரும் முதலில் அமைதியை நிலை நாட்டுவதையே புத்தாண்டு உறுதிமொழியாகக்கொள்ள வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் புதிய செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் வலியுறுத்தியுள்ளார்.

ஐ.நா.வின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கி மூனின் பதவிக் காலம் கடந்த 31ம் தேதியோடு முடிவடைந்தது.

இதனைத்தொடர்ந்து புதிய செயலாளர் நாயகமாக போர்த்துக்கள் நாட்டின் முன்னாள் பிரதமர் நேற்று அதிகாரப்பூர்வமாக அன்டோனியோ குட்டரஸ் பதவி ஏற்றார்.

அதன்பிறகு ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்தார்.

உலக மக்கள் அனைவரும் முதலில் அமைதியை நிலை நாட்டுவதையே புத்தாண்டு உறுதி மொழியாக ஏற்க வேண்டும். நாடுகளுக்கு இடையே பிரச்னைகளை தீர்க்க நான் பாலமாக விளங்குவேன்’ என்றும் உறுதியளித்தார்.

2021 டிசம்பர் 31ம் தேதி வரை ஐநாவின் செயலாளர் நாயகமாக அன்டோனியோ குட்டரஸ் பதவிவகிப்பார்.

ஐக்கிய நாடுகள் சபையின் அன்டோனியோ குட்டரஸ் ஒன்பதாவது செயலாளர் நாயகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் 1995ஆம் ஆண்டு முதல் 2002ஆம் ஆண்டு வரை போர்த்துக்கல் நாட்டின் பிரதமராகக் கடமையாற்றியவர். 2005ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான ஆணையாளராகவும் கடமையாற்றியிருந்தார். கடந்த வருடம் டிசம்பர் மாதம் 12ஆம் திகதி புதிய செயலாளர் நாயகமாக இவர் தெரிவுசெய்யப்பட்டதுடன் நேற்றைய தினம் இவர் தனது பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டார்

Related Posts