இன்று முதல் அரசாங்க வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்களுக்கு தனியார் வைத்தியசாலைகளில் இரத்தப் பரிசோதனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் ராஜித்த சேனாரத்னவால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த 31ம் திகதியளவில் அரசாங்கத்தினால் சகல பரிசோதனை கூட வசதிகளும் உள்ள வைத்தியசாலைகளுக்கு இரத்த பரிசோதனை செய்யும் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக, தெரியவந்துள்ளது.
அரசாங்கத்திலுள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்களின் இரத்தப் பரிசோதனைகளை தனியார் பிரிவினரால் மேற்கொள்வதாக தெரியவந்தால், இன்று முதல் சம்பந்தப்பட்ட வைத்தியசாலை (அரச வைத்தியசாலை) பணிப்பாளருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும், சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் அனைத்து அரசாங்க வைத்தியசாலை பணிப்பாளர்களுக்கும் இது குறித்து விஷேட சுற்றறிக்கை ஒன்றை வௌியிடுமாறு சுகாதார அமைச்சின் செயலாளர் அனுர ஜெயவிக்ரமவுக்கு, அமைச்சர் ராஜித்த சேனாரத்ன பணிப்புரை விடுத்துள்ளார்.