செயற்கைக் கண் வில்லைகளை இலவசமாக அல்லது குறைந்த விலைக்கு வழங்க நடவடிக்கை

நோயாளிகளின் நலன்கருதி அவர்களுக்கான மருந்துப் பொருட்களினதும், பயன்படுத்தப்படும் வைத்திய உபகரணங்களினதும் விலைகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார போஷாக்கு மற்றம் சுதேச மருத்துவத்தறை அமைச்சர் டொக்டர் ராஜித்த சேனாரட்ன தெரிவித்தார்.

இதுதொடர்பாக அமைச்சர் டொக்டர் ராஜித்த சேனாரட்ன மேலும் தெரிவித்தாவது:

முதற் கட்டமாக செயற்கை கண் வில்லைகளின் விலைகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வில்லைகளின் விலைகள் மிகவும் அதிகமாக உள்ளன என்று நோயாளிகள் தெரிவித்த முறைப்பாடுகளை அடுத்தே இந்தத் தீர்மானம் எடுக்கப்படடுள்ளது.

இதன் அடிப்படையில், கண் குறைப்பாடு உள்ள நோயாளிகளுக்கு சுமார் ஒரு லட்சம் செயற்கைக் கண் வில்லைகளை இலவசமாக வழங்குவதற்கு சுகாதாரத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

தனியார் வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைக்கென செல்லும் கண் நோயாளிகளிடமிருந்து செயற்கை வில்லைகளுக்கென அதிக கட்டணங்கள் அறவிடப்படுவதாக, சுகாதாரத்துறை அமைச்சருக்கு முறைபாடுகள் கிடைத்துள்ளன. தனியார் வைத்தியசாலைகள் சுமார் எட்டாயிரம் ரூபாவிற்கு கண் வில்லையொன்றை இந்தியாவிலிருந்து தருவித்து, உள்ளுர் நோயாளிகளிடம் அதனை 25 ஆயிரம் ரூபாவிற்கு விற்றுவருகிறது. இந்த நிலைமையை கட்டுப்படுத்த உடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உறுதியளித்தார்.

Related Posts