“இலங்கையில் தமிழ் ஈழத்தை நிறுத்து” லண்டனில் இலங்கையர்கள் ஆர்ப்பாட்டம்

அரசியலமைப்பு சீர்திருத்தத்துக்கு எதிராக லண்டனில் வசிக்கும் இலங்கையர்கள் அண்மையில் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

இலங்கை தேசிய கொடியை ஏந்தியவாறு சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளிலான பதாகைகளை ஏந்தியவண்ணம் இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு (TNA), அமேரிக்கா, ஐக்கிய ராஜ்ஜியம், ஐரோப்பா மற்றும் கனடா ஆகியவற்றின் விருப்பத்துக்கமைய பெடரல் அரசியலமைப்பொன்றை அரசாங்கம் கொண்டுவரப்போவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றஞ்சாச்சட்டியுள்ளனர்.

இதேவேளை, இலங்கை அரசு முப்படையினரை நடத்தும் விதம் மற்றும் இந்தியாவுடனான உத்தேச வர்த்தக உடன்படிக்கை என்பனவற்றுக்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

“அரசியலமைப்பில் கைவைக்காதே”, “இலங்கையில் தமிழ் ஈழத்தை நிறுத்து” போன்ற கோஷங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது

Related Posts