இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் 206 ஓட்டங்களால் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்றுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி, போட் எலிசபெத்திலுள்ள செயின்ட் ஜோர்ச் பார்க் மைதானத்தில் கடந்த 26ம் திகதி ஆரம்பமானது.
முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த தென்னாபிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 286 ஓட்டங்களை பெற்றிருந்தது.
இதனையடுத்து தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 64.5 ஓவர்களுக்கு மட்டுமே தாக்குப் பிடித்து 205 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
இதன்படி 81 ஓட்டங்களால் முன்னிலையில் இருந்த தென்னாபிரிக்க அணி தனது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்தது.
தென்னாபிரிக்கா அணி 406 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்திருந்த நிலையில் இரண்டாவது இன்னிங்சை இடைநிறுத்துவதாக அறிவித்தது.
இதற்கமைய இலங்கைக்கு 488 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இலங்கை அணி துடுப்பாட்டத்தை ஆரம்பித்தது.
எனினும் 281 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்ட இலங்கை அணி 206 ஓட்டங்களால் தோல்வியடைந்ததுள்ளது.
ஆட்டத்தின் சிறப்பாட்டக்காரராக எஸ்சி குக் (தென் ஆப்ரிக்கா) தெரிவுசெய்யப்பட்டுள்ளார்