யாழ். தொழில்நுட்பவியல் கல்லூரியின் 2017ஆம் கல்வி ஆண்டுக்கான கற்கை நெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியல், தொலைத்தொடர்பு தொழில் நுட்பவியல், நிர்மாண தொழில்நுட்பவியல், கணிய அளவையியல் தொழில்நுட்பவியல், மோட்டார் வாகன தொழில்நுட்பவியல், தேசிய கணக்கீடு, ஆங்கிலம் மற்றும் கல்வியியல் போன்ற கற்கை நெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
விண்ணப்பிக்க விரும்புவோர் எதிர்வரும் ஐனவரி மாதம் (13) ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பப் படிவங்களை பெற்று பூரணப்படுத்தி சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது.