வருடாந்த திருவிழாவுக்கு பக்தர்கள் வந்து செல்ல வசதியாக கச்சதீவில் மிதக்கும் துறைமுகம் ஒன்று அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்டச் செயலாளர் என்.வேதநாயன், தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,“ சுற்றுலாதுறை அமைச்சின் நிதியுதவியுடன் 7 மில்லியன் ரூபாய் செலவில் மிதக்கும் துறைமுகம் அமைக்க உத்திதேசிக்கப்பட்டுள்ளது. கச்சதீவு ஆலய பங்குத்தந்தை விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, இத் துறைமுகம் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
கச்சதீவு வருடாந்த திருவிழாவுக்கு இலங்கை, இந்திய பக்தர்கள் வருவது வழமை. இங்கு துறைமுகம் இன்மையினால் கடற்படையினரின் பாரிய மிதவை படகு மூலம் பக்தர்கள் ஏற்றி இறக்கப்படுவது சிரமமான ஒன்றாக காணப்படுகிறது.
இதனையடுத்து, இப்பகுதியில் மிதக்கும் துறைமுகம் ஒன்றினை அமைப்பதற்கான தேவையுள்ளது. இத்துறைமுகத்தை அமைக்க கடற்படையினரின் உதவியை பெற்றுத்தர கடற்படை தளபதி முன்வந்துள்ளார்” என அவர் குறிப்பிட்டார்.