நாட்டில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
வடக்கு கிழக்கு ஊவா , வடமத்திய மத்திய மாகாணம் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை அல்லது மழை எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
பல பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் இடியுடன் மழை அல்லது மழை காணப்படும் என்று திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேற்கு சப்ரகமுவா ஊவா மற்றும் தென் மாகாணங்களில் பலமான காற்றும் 50 மில்லிமீற்றறுக்கு அதிகமான மழைவீழ்ச்சியும் எதிர்பாக்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.