இந்தியாவின் கிழக்குப் பிராந்தியத்தில் ஏவுகணை பரீட்சார்த்த நடவடிக்கைகள் இடம்பெறுவதனால், இலங்கை – இந்தியாவுக்கான விமான சேவை இன்று நண்பகல் வரை இடம்பெற மாட்டாதென கட்டுநாயக்க விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தக் காலப் பகுதிக்குள் 10 விமானப் போக்குவரத்துக்கள் தாமதித்து இடம்பெறும் எனவும் விமான நிலைய அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று காலை ஜகர்த்தா மற்றும் சிங்கப்புர் நோக்கி செல்லவிருந்த விமானமும் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இன்று காலை 8.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை இந்த ஒத்திகை இடம்பெறும் என இந்தியா அறிவித்துள்ளது.