பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டிகளை எதிர்வரும் பெப்ரவரி 15ஆம் திகதிக்கு முன்னர் நிறைவு செய்யுமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில்; வலய விளையாட்டுப் போட்டிகளை ஏப்ரல் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னரும், மாகாண ரீதியிலான போட்டிகளை ஜூன்மாதம் 22 ஆம் திகதிக்கு முன்னரும் நடத்தி முடிக்கப்பட வேண்டுமென்றும் குறிப்பிட்டுள்ளது.
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டி அக்டோபர் மாதம் முதலாம் திகதியில் இருந்து 15ஆம் திகதியுடன் பூர்த்தி செய்யப்பட வேண்டுமென்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.