பாடசாலைகளின் 2ஆம் தவணைக்கான விடுமுறை இன்று ஆரம்பம்

நாடளாவியில் உள்ள அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரசு அனுமதி பெற்றுள்ள தனியார் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணைக்கான விடுமுறைகள் இன்று  முதல் ஆரம்பமாகிறது.இன்றைய தினம் விடுமுறை விடப்படும் இப்பாடசாலைகள் மூன்றாம் தவணைக்காக எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 03ம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளன. 
எனினும் நோன்பு விடுமுறைக்காக தற்சமயம் மூடப்பட்டிருக்கும் முஸ்லிம் பாடசாலைகள் எதிர்வரும் 22ம் திகதி ஆரம்பமாகவுள்ளன. இருப்பினும் இவ்வாண்டுக்கான க. பொ. த. உயர்தர பரீட்சை மற்றும் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெறும் 53 பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய பாடசாலைகள் அனைத்தும் செப்டெம்பர் மாதம் 3ஆம் திகதி மூன்றாம் தவணைக்காக ஆரம்பமாகவுள்ளது.

Related Posts